/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சதுரகிரியில் இடப்பிரச்னையால் வாகனங்கள் நிறுத்துவதில் சிக்கல்
/
சதுரகிரியில் இடப்பிரச்னையால் வாகனங்கள் நிறுத்துவதில் சிக்கல்
சதுரகிரியில் இடப்பிரச்னையால் வாகனங்கள் நிறுத்துவதில் சிக்கல்
சதுரகிரியில் இடப்பிரச்னையால் வாகனங்கள் நிறுத்துவதில் சிக்கல்
ADDED : ஜூலை 26, 2011 09:39 PM
வத்திராயிருப்பு:சதுரகிரி மலை அடிவாரத்தில் தனியார் ஆக்கிரமிப்பாலும், வனத்துறையின் அனுமதி கிடைக்காததாலும் ஆடி அமாவாசைக்கு வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.சதுரகிரி மலையில் வீற்றிருக்கும் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்களில் ஆடி அமாவாசை விழா வரும் 30 ல் நடக்கிறது.
இதற்காக தமிழகம் முழுவதுமிருந்தும் பக்தர்கள் ஆடி துவக்கத்திலிருந்தே மலைக்கு வரத்துவங்குவர். தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் மலையடிவாரமான தாணிப்பாறைக்கு வந்து செல்கின்றன. அடிவாரத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்ட நிலங்களை தனியார்கள் வேலி போட்டு அடைத்துள்ளனர். இதனால் கடந்த சில ஆண்டுகளாக தனியார் வாகனங்கள், அரசு பஸ்கள் அனைத்தும் வனப்பகுதியில் நிறுத்தப்பட்டன. இந்த இடத்தையும் வனத்துறையினர் வேலிபோட்டு அனுமதி மறுத்துள்ளனர். தனியார் ஆக்கிரமிப்பு , வனத்துறை பாதுகாப்பு நடவடிக்கையால் வாகனங்களை நிறுத்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு போக்குவரத்து அதிகாரிகள் வனத்துறையினருடன் பேசிவருகின்றனர். இதற்கு அனுமதி கிடைத்தாலும், நீண்ட தூரத்திலிருந்து வரும் வாகனங்கள் நிறுத்த தற்போதுள்ள தனியார் இடங்களும் போதுமானதாக இல்லை. இதனால் அடிவாரத்திலிருந்து ஒரு கி.மீ., தூரத்தில்தான் வாகனங்களை நிறுத்தவேண்டிய நிலை உள்ளது.ஏற்கனவே கடந்த ஒருவாரமாக இங்கு வரும் வாகனங்கள் ரோட்டின் இருபுறங்களிலும் நிறுத்தப்பட்டு வருகின்றன. திருவிழா நெருங்குவதால் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, இதற்கு தீர்வு காண இப்போதே போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டா பெயரில் தனியார்கள் ஆக்கிரமித்துள்ள நிலங்களை கையகப்படுத்தி, பக்தர்களின் வாகனங்கள் சிரமமின்றி வந்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.