/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆயிரம் அடி உயர சஞ்சீவி மலையில் காவிக்கொடி ஏற்றி வழிபாடு
/
ஆயிரம் அடி உயர சஞ்சீவி மலையில் காவிக்கொடி ஏற்றி வழிபாடு
ஆயிரம் அடி உயர சஞ்சீவி மலையில் காவிக்கொடி ஏற்றி வழிபாடு
ஆயிரம் அடி உயர சஞ்சீவி மலையில் காவிக்கொடி ஏற்றி வழிபாடு
ADDED : ஜன 22, 2024 11:31 PM

ராஜபாளையம் : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 1000 அடி உயர சஞ்சீவி மலை உச்சியில் கட்டுப்பாடுகளை மீறி ஹிந்து அமைப்பினர் அயோத்தியில் இருந்து வந்த காவி கொடியை ஏற்றினர்.
ராஜபாளையம் நகரில் நடுவில் அமைந்துள்ளது சஞ்சீவி மலை. ராமாயணத்தில் ராவணனுக்கு எதிரான போரில் பலத்த காயமடைந்தவரை உயிர்ப்பிக்க அனுமன் துாக்கி வந்த சஞ்சீவி மலையின் சிதறல் இம்மலை என பக்தர்களிடம் நம்பிக்கை நிலவுகிறது. ஆயிரம் அடி உயரமுடைய இம்மலை உச்சியில் அமைந்துள்ள பெரிய பாறை ராமர் கல் என அழைக்கப்படுவதுடன் அருகே ராமர் கோயிலும் அனுமன் பாதமும் உள்ளது.
நகர் போலீசாரின் கெடுபிடியை மீறி நேற்று ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை முன்னிட்டு அயோத்தியில் இருந்து கொண்டு வந்த காவிக் கொடியை மலை உச்சியிலுள்ள ராமர் கல் அருகே மதியம் 12:20 மணிக்கு ஏற்றினர். அனுமன் பாதத்தில் மலர் அலங்காரம் செய்தும் பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., பஜ்ரங்தள் உள்ளிட்ட ஹிந்து அமைப்பினர் வழிபட்டு திரும்பினர்.

