ADDED : ஜன 30, 2024 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தில் புனித செபஸ்தியார் சர்ச் திருவிழா சப்பர பவனி நடந்தது.
ஜன. 27 இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் மறைவட்ட அதிபர் சந்தன சகாயம் புனித செபஸ்தியாரின் கொடியை ஏற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றினார். மறுநாள் இரவு புனித செபஸ்தியார் சப்பர பவனியை புனித அமலோற்பவ அன்னை சர்ச்சில் வைத்து உதவி பாதிரியார் செல்வ சகாயம் துவக்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக சப்பர பவனி நடந்தது. இரவு திருப்பலி முடிந்த பின்பு கொடி இறக்கம் செய்யப்பட்டது. ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.