/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தொகுப்பூதிய ஊழியர்களுக்குசம்பளம் தாமதமாக வாய்ப்பு
/
தொகுப்பூதிய ஊழியர்களுக்குசம்பளம் தாமதமாக வாய்ப்பு
ADDED : மார் 30, 2025 02:40 AM
விருதுநகர்:அரசு துறைகளில் பணிபுரியும் தொகுப்பூதிய ஊழியர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளம் தாமதாக கிடைக்கும் நிலை இருப்பதாக அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
மருத்துவம், சுகாதாரம், கால்நடை, சமூக நலத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் உள்பட அரசின் பல்வேறு துறைகளில் தொகுப்பூதியத்தில் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் பணிபுரியும் துறைகளை பொறுத்து மாத ஊதியம் தேதிகளை கணக்கீட்டு வழங்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டிற்கான கணக்கு முடிக்கும் பணிகள் அரசு துறைகளிலும் நடக்கிறது. இதனால் தொகுப்பூதிய பணியாளர்களுக்கான ஊதியம் கணக்கீட்டு வழங்குவதில் தாமதமாகும் நிலை உள்ளது.
இது குறித்து துறை அதிகாரிகளிடம் தொகுப்பூதிய பணியாளர்கள் கேட்டு வருகின்றனர். ஆனால் ஏப்ரல் மாத ஊதியம் மட்டும் வழக்கமாக வழங்கப்படும் நாளில் இருந்து ஓரிரு நாட்கள் கடந்து வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருப்பதால் கவலை அடைந்துள்ளனர்.
தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஊதியத்தை கால தாமதம் செய்யாமல் மாத முதல் தேதியில் தமிழக அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.