ADDED : அக் 14, 2024 09:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் : வெம்பக்கோட்டை செவல்பட்டியை சேர்ந்தவர் மாரீஸ்வரன், 25. துலுக்கன்குறிச்சி ஜெகநாதன், 54. இருவரும் டிராக்டர், மண் அள்ளும் இயந்திரத்துடன் துலுக்கன்குறிச்சி ஊருணியில் மணல் திருடினர்.
புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனி வருவாய் அலுவலர் முத்து முருகன் போலீசில் புகார் செய்தார். போலீசார் டிராக்டர், மண் அள்ளும் இயந்திரத்தை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.