/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோட்டோர கழிவுகளால் சுகாதாரக்கேடு
/
ரோட்டோர கழிவுகளால் சுகாதாரக்கேடு
ADDED : மார் 20, 2024 12:01 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி 23 வது வார்டில் சேதமடைந்த பேவர் பிளாக் ரோடு, ரோட்டோர கழிவுகளால் சுகாதாரக் கேடு, ஆண்கள் சுகாதார வளாகம் இல்லாத நிலை, கொசு தொல்லை என பல்வேறு பிரச்சனைகளில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர்.
இந்த வார்டில் சந்தன மாரியம்மன் கோவில் கிழக்குத் தெரு, தெற்கு தெரு, நடுத்தெரு, காமராஜர் ஸ்கூல் தெரு, திருமலாபுரம் ஆகிய தெருக்கள் உள்ளது. இப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகளும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
வார்டின் அனைத்து தெருக்களிலும் தார் மற்றும் பேவர் பிளாக் ரோடுகள் நல்ல முறையில் உள்ள நிலையில் வாறுகால்களில் மண், கழிவுகள் அடைப்பட்டு தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுத்துகிறது. இதனால் மாலை நேரங்களில் கொசு தொல்லை காணப்படுகிறது.
மம்சாபுரம் செல்லும் மெயின் ரோட்டில் இருபுறமும் உள்ள ரோட்டோர கழிவுகளால் சுகாதாரக் கேடு காணப்படுகிறது . கிழக்குத் தெருவில் பேவர் பிளாக் ரோடு சிதைந்து காணப்படுகிறது.
மெயின் ரோட்டில் உள்ள வேகத்தடைகளில் பூசிய வர்ணம் அழிந்து விட்டதால் டூவீலரில் வரும் வாகன ஓட்டிகள் விபத்திற்கு ஆளாகும் அபாயம் உள்ளது.
மெயின் ரோட்டில் வளைவுப் பகுதி போதிய அகலம் இன்றியும் தடுப்பு சுவர் இல்லாமல் இருப்பதால் விபத்து அபாயம் காணப்படுகிறது. இத்தகைய குறைகளை நகராட்சி நிர்வாகம் சரி செய்து தர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.

