தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/போனஸ் கேட்டு துாய்மை பணியாளர்கள் போராட்டம்

போனஸ் கேட்டு துாய்மை பணியாளர்கள் போராட்டம்

போனஸ் கேட்டு துாய்மை பணியாளர்கள் போராட்டம்


UPDATED : நவ 06, 2026 07:24 PM

ADDED : நவ 06, 2026 05:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:24 PM ADDED : நவ 06, 2026 05:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் துாய்மை பணியாளர்கள் தீபாவளி போனஸ் கேட்டு பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகாசி மாநகராட்சியில் 274 துாய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் தீபாவளி போனஸ் கேட்டு பணியை புறக்கணித்து இன்று (நவ.,6) காலை 6:30 மணி அளவில் பழைய நகராட்சி அலுவலகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கமிஷனர் மகேஸ்வரி அவர்களிடம், ஒப்பந்ததாரரிடம் ரூ. 1000 தீபாவளி போனஸ் ஆக வழங்க கூறப்பட்டுள்ளது என கூறினார். ஆனால் போனஸ் ரூ. 5000 கண்டிப்பாக வழங்க வேண்டும் இல்லையெனில் இன்றும் பணியை புறக்கணித்து போராட்டம் நடக்கும் என தொழிலாளர்கள் கூறினர். தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தையால் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிஐடியு சங்கம் சார்பில் மாவட்ட பொது செயலாளர் பாலசுப்பிரமணியன், செயலாளர் தேவா, மாநகர செயலாளர் சுரேஷ் குமார், மாவட்ட குழு உறுப்பினர் பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us