தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பாதுகாப்பு உபகரணம் இன்றி துாய்மை பணியாளர்கள் திண்டாட்டம்! காயம் ஏற்பட்டு நோய்களுக்கு ஆளாகும் பரிதாபம்

பாதுகாப்பு உபகரணம் இன்றி துாய்மை பணியாளர்கள் திண்டாட்டம்! காயம் ஏற்பட்டு நோய்களுக்கு ஆளாகும் பரிதாபம்

பாதுகாப்பு உபகரணம் இன்றி துாய்மை பணியாளர்கள் திண்டாட்டம்! காயம் ஏற்பட்டு நோய்களுக்கு ஆளாகும் பரிதாபம்


ADDED : ஜூலை 07, 2024 11:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2024 11:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

துாய்மை பணியாளர்களின் பணி அளப்பரியது. மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் என அனைத்து வகை உள்ளாட்சிகளில் ஏராளமான தூய்மை பணியாளர்கள் பணி செய்து வருகின்றனர். உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலம் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். மாதம் 4 சலவை சோப்பு, 2 குளியல் சோப், ஒளிரும் கோட், குப்பை அள்ள கரண்டி, விளக்குமாறு, ஒட்டடை கட்டை வழங்க வேண்டும்.

கொரோனா சமயத்தில் முறைப்படி பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டதோடு சரி. கடந்த சில ஆண்டுகளாக பெரும்பாலான உள்ளாட்சி நிர்வாகங்களில் துாய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் சரிவர வழங்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது. சில நகராட்சிகள் உபகரணங்களை முறைப்படி வழங்குகின்றன.

குப்பைகளை அள்ளும்போது அதில் அசுத்தமான பொருட்கள், உடைந்த பாட்டில்கள் அதிக அளவில் இருக்க வாய்ப்புள்ளது. பிளாஸ்டிக், கேரி பைகள் உள்ளிட்ட குப்பைகள் அடைத்து சாக்கடையில் கழிவு நீர் செல்ல வழி இல்லாமல் தேங்கி நிற்கும். அப்போது தேங்கி கிடக்கும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கைகளால் அகற்றுகின்றனர்.

அவ்வாறு அகற்றும் போது குப்பைகளில் கிடக்கும் உடைந்த கண்ணாடி பொருட்களால் தூய்மை பணியாளர்களின் கை, கால்களில் காயப்படுகின்றன. விஷப் பூச்சிகள் கடிக்கும் ஆபத்து உள்ளது. தொற்று நோய் உண்டாக வாய்ப்புள்ளது.

உள்ளாட்சி நிர்வாகங்களில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டாலும் தூய்மை பணியாளர்கள் அதனை முறைப்படி அணிவது கிடையாது, சரிவர பயன்படுத்துவது இல்லை. ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும்.

பெரும்பாலான உள்ளாட்சிகளில் ஒப்பந்த ஊழியர்களுக்கு சரிவர வழங்குவது கிடையாது. இதனால் நோய் தொற்றுகளுக்கு ஆளாகின்றனர். பாதுகாப்பு உபகரணங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை முறைப்படி பயன்படுத்த உள்ளாட்சி நிர்வாகங்கள் முன்வர வேண்டும்.

தன் நலத்தை பொருட்படுத்தாமல் மற்றவர்களுடைய நலனை கருதி சேவை மனப்பான்மையுடன் பணியாற்றி வரும் துாய்மை பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து பணியாற்ற வேண்டும். பாதுகாப்பு உபகரணங்களை வழங்காத உள்ளாட்சி நிர்வாகங்கள் அதை விரைந்து வழங்க வேண்டியது அவசியமாகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us