/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் 2025 டிசம்பரில் பயன்பாட்டிற்கு வரும் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

ADDED : அக் 18, 2024 04:44 AM
சிவகாசி: சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணிகள் 2025 டிசம்பரில் முடிந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும், என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்துார் ரோட்டில் சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் அமைக்க பிப். 26 ல் சிவகாசி, திருத்தங்கல் ரயில்வே மேம்பால பணிக்கு பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். சிவகாசி பெரியகுளம் கண்மாய் இரட்டை பாலம் முதல் சட்சியாபுரம் பேருந்து நிறுத்தம் வரை 700 மீட்டர் நீளத்திற்கு 12 மீட்டர் அகலத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க ரூ.61.74 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நெடுஞ்சாலை துறை சார்பில் ஒப்பந்தம் வெளியிடப்பட்டது.
ஆக. 17 ல் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பாலம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில், கட்டுமான பணிகள் தொடங்கிய குறுகிய காலத்திலேயே மொத்தமுள்ள 17 பில்லர்களில் 15 பில்லர்களுக்கான அஸ்திவாரம் அமைக்கப்பட்டு, கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பணிகளில் உள்ள இடர்பாடுகளை களைந்து கட்டுமான பணிகளை விரைவுப்படுத்துவதற்கான சூழல் உருவாக்கப்படும்.
திட்டத்திற்கான காலக்கெடு 2025 டிச., மாதம் வரை உள்ள நிலையில் அதற்கு முன்பாகவே கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும், என்றார்.
சிவகாசி மேயர் சங்கீதா, கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய குழு துணை தலைவர் விவேகன் ராஜ், நெடுஞ்சாலைத்துறை சிறப்பு திட்டங்கள் உதவி கோட்ட பொறியாளர் ஜெகன் செல்வராஜ் உடன் இருந்தனர்.