/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துார் நம்பி ராஜபுரத்தில் வாறுகால் வசதியின்றி அவதி
/
சாத்துார் நம்பி ராஜபுரத்தில் வாறுகால் வசதியின்றி அவதி
சாத்துார் நம்பி ராஜபுரத்தில் வாறுகால் வசதியின்றி அவதி
சாத்துார் நம்பி ராஜபுரத்தில் வாறுகால் வசதியின்றி அவதி
ADDED : ஏப் 16, 2025 08:03 AM

சாத்துார் : சாத்துார் நம்பிராஜபுரத்தில் முறையான ரோடு, வாறுகால் வசதியின்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.
சாத்துார் ஊராட்சி ஒன்றியம் அயன் சத்திரப் பட்டி ஊராட்சிக்குட்பட்ட நம்பிராஜபுரம் காளியம்மன் கோயில் வடக்குத் தெருவில் சிமென்ட் ரோடு போடப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
இதன் காரணமாக ஆங்காங்கே பள்ளம் உருவாகியுள்ளது. இதில் கழிவு நீருடன் மழைநீர் தேங்கி நின்று சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் உள்ள மெயின் தெருக்களில் வாறுகால் பேவர் பிளாக் ரோடு போடப்பட்டது.
காளியம்மன் கோயில் வடக்குத் தெருவில் பேவர் பிளாக் ரோடு போடப்படவில்லை. மேலும் இங்குள்ள வாறுகால் முறையாக அமைக்கப்படாததால் கழிவுநீர் வாறுகாலில் செல்லாமல் ரோட்டில் வழிகிறது.
குழந்தைகள் கழிவுநீரில் கால் வைத்து நடந்து செல்வதால் சொறி சிரங்கு போன்ற தொற்று நோய்கள் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். மேலும் துர்நாற்றத்தால் மக்கள் சுவாசக் கோளாறு ஏற்பட்டு அவதிப்படுகின்றனர்.
இந்த பகுதியில் முறையான ரோடு, வாறுகால் வசதி செய்து தர வேண்டும். கழிவுநீர் பாதையில் தேங்காமல் செல்ல பேவர் பிளாக் ரோடு அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

