/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மரங்களால் பசுமையும் மனநிறைவும் மகிழ்ச்சியில் சாத்துார் குடியிருப்போர்
/
மரங்களால் பசுமையும் மனநிறைவும் மகிழ்ச்சியில் சாத்துார் குடியிருப்போர்
மரங்களால் பசுமையும் மனநிறைவும் மகிழ்ச்சியில் சாத்துார் குடியிருப்போர்
மரங்களால் பசுமையும் மனநிறைவும் மகிழ்ச்சியில் சாத்துார் குடியிருப்போர்
ADDED : ஜூலை 07, 2025 02:23 AM

சாத்துார் நகரம் ஒரு கந்தக பூமியாக இருந்த போதும் இங்கு வாழும் மக்கள் எப்பொழுதும் இயற்கையை நேசித்து வருகின்றனர்.
மெயின் ரோடு, நான்கு வழிச்சாலை படந்தால் ரோடு என பல்வேறு பகுதிகளில் ரோடு விரிவாக்க பணிக்காக பல நுாறு ஆண்டுகள் பழமையான மரங்களை அதிகாரிகள் வெட்டி வீழ்த்தி அகற்றிய போதும் மரங்களின் மீது உள்ள நேசத்தினால் சாத்துார் பகுதி மக்கள் சாலை ஓரங்களில் தொடர்ந்து மரங்கள் வெட்டப்பட்ட போதும் அயற்ச்சியின்றி மரங்களை வளர்த்து வருகின்றனர்.
இளைஞர்கள், மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தொழிலதிபர்கள் தாங்களாக முன் வந்து மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி சாலை ஓரங்களில் நட்டு தொடர்ந்து பராமரிக்கவும் ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
சிதம்பரம் நகர், பெரியார் நகர், அண்ணா நகர், தில்லைநகர் பகுதிகள் தற்போது மரங்கள் நிறைந்த சோலைவனமாக உள்ளது. வீடுகள் தோறும் மரங்கள் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதால் இந்த பகுதியில் கோடை காலமும் குளிர்காலம் போல தென்றல் வீசி வருகிறது.
நிலத்தடி நீர் ஆதாரமாக இருந்த மரியன் ஊரணி கண்மாயையும் பராமரித்து தற்போது அதனை பூங்காவாக மாற்றி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அரசும் மக்கள் கோரிக்கையை ஏற்று புதிய பூங்காக்களை உருவாக்கி மாசில்லா நகரை உருவாக்க மக்களுடன் செய்து வருகிறது. மக்கும் பொருட்களின் பயன்பாடு அதிகரிக்கும் போது மக்காத பொருட்களின் பயன்பாடு குறையும். தேவையில்லாத பிளாஸ்டிக் குப்பையை கட்டுப்படுத்தினால் மாசில்லா நகர் உருவாகும் என தன்னார்வலர்கள் கூறினர்.

