/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துார் கிராமங்களில் மின்வெட்டால் அவதி
/
சாத்துார் கிராமங்களில் மின்வெட்டால் அவதி
ADDED : நவ 16, 2025 03:22 AM
சாத்துார்: சாத்துார் மற்றும் சுற்று கிராமங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
சாத்துார் நகர், சத்திரப் பட்டி, ஒத்தையால், நத்தத்துபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு நாட்களாக அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இந்தப் பகுதியில் தீப்பெட்டி தொழிற்சாலைகள்,தீக்குச்சி தயாரிக்கும் கம்பெனிகள்,ஆப்செட் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. மேலும் தற்போது தீவிரமாக விவசாய பணிகளும் நடைபெற்று வருகிறது. கிணற்றுப் பாசனம் மூலம் பயிர் செய்து வரும் விவசாயிகள் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இரவு நேரத்தில் மின்தடை செய்வதால் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள், துாக்கமின்றி அவதிப்படுகின்றனர். எனவே தடையில்லா மின்சாரம் வழங்கிட வேண்டுமென மக்கள் மின்சாரத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

