sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சாலை ஓரம் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளை காப்பாற்றுங்க

/

சாலை ஓரம் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளை காப்பாற்றுங்க

சாலை ஓரம் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளை காப்பாற்றுங்க

சாலை ஓரம் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளை காப்பாற்றுங்க


ADDED : ஜூலை 22, 2025 03:18 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 03:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை - கன்னியா குமரி நான்கு வழி சாலை அமைக்கப்பட்ட போது சாலையின் ஓரம் 100 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. இவற்றிற்கு மாற்றாக நகாய் அமைப்பு சாலை ஓரங்களில் இருபுறமும் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வளர்த்து வருகிறது. பல இடங்களில் இந்த மரக்கன்றுகள் வளர்ந்து மரங்களான நிலையில் உள்ளது.

இருந்த போதும் சாத்துாரில் இருந்து கோவில்பட்டி செல்லும் நான்கு வழிச்சாலையில் தற்போது கோடை காலம் போல சுட்டெரித்து வரும் வெயில் காரணமாக சாலை ஓரத்தில் உள்ள புற்கள் தீ பிடித்து எரிவதுடன் சாலை ஓரத்தில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகள் தீபற்றி கருகி வருகின்றன.

ஆடி மாதம் என்பதால் காற்றும் அதிக அளவில் வீசி வருகிறது. காடுகளில் ஆடு ,மாடுகள் மேய்க்கும் நபர்கள் , நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகனங்கள் , நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சாலை ஓரம் புகைத்து விட்டு எரியும் பீடி, சிகரெட் போன்ற வற்றின் தீ கங்குகள் காய்ந்த புல்களில் விழுந்ததும் தீப்பற்றி விடுகிறது.

இந்த தீ காற்று வீசுவதன் மூலம் வேகமாக பரவி இரும்பு கம்பிக்குள் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு வரும் மரக்கன்றுகள் மீது பட்டு அவை கருகி விடுகின்றன. சாலை ஓரம் பூங்கா அமைக்கும் நோக்கில் இருமடங்காக நடப்பட்டுள்ள மரக்கன்றுகள் இந்த தீயில் கருகி வீணாகி வருகின்றன.

இதன் காரணமாக பசுமை பரப்பு குறைவதோடு அரசின் நோக்கமும் நிறைவேறாமல் போகும் அபாயம் உள்ளது. நகாய் நிறுவனம் நான்கு வழிச்சாலையில் விபத்து ஏற்படுவதை தடுப்பதற்காக ஆங்காங்கே சுங்கச்சாவடிகள் அமைத்து சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்தும் வருகிறது.

இதுபோன்று சாலை ஓரங்களில் திடீரென ஏற்படும் தீ விபத்துகளை சிசிடிவி கேமரா மூலம் கண்டறிந்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து தீயை அணைப்பதன் மூலம் மரக்கன்றுகள் கருகுவது தடுக்கப்படும்.

மேலும் நான்கு வழிச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் வெப்பத்தால் பாதிக்கப்படுவது குறையும்.எனவே நகாய் சாலை ஓரம் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளை காப்பாற்றவும். ஏற்கனவே தீயில் கருகி உள்ள மரக்கன்றுகளுக்கு மாற்றாக புதிய மரக்கன்றுகள் நடவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us