
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட புதிய எஸ்.பி., ஆக பெரோஸ்கான் அப்துல்லா பொறுப்பேற்றார்.
விருதுநகர் மாவட்ட எஸ்.பி., ஆக பணியாற்றி வந்த ஸ்ரீனிவாச பெருமாள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு அவரது இடத்திற்கு அரியலுார் எஸ்.பி., ஆக பணிபுரிந்த பெரோஸ்கான் அப்துல்லா நியமிக்கப்பட்டார். அவர் நேற்று விருதுநகரில் பொறுப்பேற்று கொண்டார்.
சட்ட ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படும் என்றும், அதிக ரோந்துகள் அனுப்பபட்டு, கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு, குற்றங்கள் குறைக்கப்படும் என்றும், மக்களின் மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.