/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
எஸ்.பி., அறிக்கை சமர்ப்பிக்க எஸ்.சி., ஆணையம் உத்தரவு
/
எஸ்.பி., அறிக்கை சமர்ப்பிக்க எஸ்.சி., ஆணையம் உத்தரவு
எஸ்.பி., அறிக்கை சமர்ப்பிக்க எஸ்.சி., ஆணையம் உத்தரவு
எஸ்.பி., அறிக்கை சமர்ப்பிக்க எஸ்.சி., ஆணையம் உத்தரவு
ADDED : நவ 16, 2024 02:14 AM
விருதுநகர்:விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு கூமாபட்டியில் தலித் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸ் எஸ்.பி., அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய எஸ்.சி., ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வத்திராயிருப்பு கூமாபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் செப்., 30ல் கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டனர். அக்., 1ல் கலவரம், ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 250க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதியப்பட்டது.
இந்நிலையில் தலித் விடுதலை இயக்கம் மாநில தலைவர் கருப்பையா தேசிய எஸ்.சி., ஆணையத்திடம் கலவரம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தலித்துகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெறவும், முறையான விசாரணை நடத்த கோரியும் மனு அளித்திருந்தார்.
நேற்று முன்தினம் தேசிய எஸ்.சி., ஆணைய இயக்குனர் ரவிவர்மன், கருப்பையாவின் மனுவை ஏற்று விருதுநகர் மாவட்ட எஸ்.பி.,யிடம் முத்துக்குமார் கொலை வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 15 நாட்களுக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.