ADDED : ஜூலை 19, 2025 11:28 PM
மன்றங்கள் துவக்க விழா
ராஜபாளையம்: ராஜபாளையம் கேசா டி மிர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ், ஆங்கில மன்றங்கள் துவக்க விழா நடந்தது. முதுநிலை முதல்வர் அருணா முன்னிலை வகித்தார். தாளாளர் வைமா திருப்பதி செல்வன் தலைமை வகித்தார். பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர்கள், மாணவர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.
சைபர் பாதுகாப்பு குறித்து பயிற்சி
ராஜபாளையம்: ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் கணினி அறிவியல்துறை, ஐ.சி.டி அகாடமி இணைந்து சைபர் பாதுகாப்பு தொடர்பான ஒரு வார கால ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நடந்தது. முதல்வர் கணேசன், துணை முதல்வர் ராஜ கருணாகரன், நிர்வாக பொது மேலாளர் செல்வராஜ் தொடங்கி வைத்தனர். ஐ.சி.டி தொழில்நுட்ப பயிற்றுனர் சிவகோபாலன் செயல்முறை பயிற்சி வழங்கினார். ஏற்பாடுகளை கணினி அறிவியல் துறை தலைவர் விஜயலட்சுமி தலைமையில் பேராசிரியர்கள் ஸ்வர்ண சுதா, பாலமுருகன் செய்திருந்தனர்.