ADDED : செப் 17, 2025 02:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : காமராஜ் பொறியியல் கல்லுாரியில் செயற்கை நுண்ணறிவு 'ஸோரா' ஆய்வக திறப்பு விழா நடந்தது. கல்லுாரி செயலாளர் தர்மராஜன் தலைமை வகித்தார்.
நிர்வாக இயக்குனர் ஜீவரத்தினம் முருகன், மதுரை பி.ஏ.எம்.சி., மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் நந்தினி, தனசாமி -பரிமளாதேவி சமூக நல அறக்கட்டளையின் உறுப்பினர் சுவாதி, ஜூம்பா நடன பயிற்சியாளர் பொன்மணி குத்துவிளக்குஏற்றினர்.
முன்னாள் நகராட்சி தலைவர் அமுதா திறந்து வைத்து மாணவர்கள் இடையே பேசினார். கல்லுாரி மலர் வெளியிடப்பட்டது.