ADDED : அக் 04, 2025 03:19 AM
நாட்டு நலப்பணி திட்ட முகாம்
ராஜபாளையம் : ந.அ. அன்னப்ப ராஜா மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ் சார்பில் 'டிஜிட்டல் கல்வி அறிவில் இளைஞர்களின் பங்கு' என்ற தலைப்பில் ஏழு நாள் சிறப்பு முகாம் முத்துலிங்காபுரம் கிராமத்தில் நடந்தது. பள்ளி செயலர் சுதர்சன் ராஜூ தலைமை விகித்தார், நிர்வாகி சத்தியபிரியா முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் ரமேஷ் வாழ்த்தினார்.சாலையோர முட்புதர்களை அகற்றுதல், கோயில்களில் உழவாரப் பணி, இயற்கை பேரிடர் மேலாண்மை பயிற்சி, தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு, சிறுசேமிப்பின் முக்கியத்துவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. முகாம் ஏற்பாடுகளை திட்ட அலுவலர் பிரான்சிஸ் அருள்ராஜ், பழனிவேல் ராஜன் உள்ளிட்ட ஆசிரியர் செய்தனர்.
பள்ளியில் சரஸ்வதி பூஜை
ராஜபாளையம் : ராஜபாளையம் வைமா வித்யாலயாவில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது. கல்வி குழும தலைவர் வைமா திருப்பதி செல்வன் தலைமை வகித்தார். மேனேஜிங் டிரஸ்டி அருணா விளக்கேற்றினார். வகுப்பு மாணவிகள் சரஸ்வதி தேவி வேடமணிந்து கலை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.