/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குண்டாற்றில் சுவாமி அம்பு விடுதல்
/
குண்டாற்றில் சுவாமி அம்பு விடுதல்
ADDED : அக் 04, 2025 03:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சுழி: திருச்சுழி திருமேனிநாதர் கோயிலில் நவராத்திரி விழாவின் நிறைவு நாளை முன்னிட்டு குண்டாற்றில் அம்பு விடுதல் நடந்தது.
திருச்சுழி திருமேனிநாதர் கோயிலில் நவராத்திரி விழா 10 நாட்கள் நடந்தது நிறைவு நாளான நேற்று முன்தினம் மாலை குண்டாற்றில் அம்பு விடுதல் நடந்தது. அசுரர்களை வதம் செய்ய அம்பாள் உக்கிர கோப ரூபமாக எழுந்தருளும் நிலையில், முருகன் குழந்தை ரூபமாக தோன்றி அம்பாளின் கோபத்தை தணித்து சாந்தத்தை ஏற்படுத்தும் விதமாக அம்பு எய்தல் நடைபெற்றது.
ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.