ADDED : நவ 25, 2024 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம் : ராஜபாளையம் கேசா டி மிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான பல் மருத்துவர் முகாம் நடந்தது.
ரோட்டரி கிளப் சூப்பர் கிங்ஸ் பட்டய தலைவர் செல்வ அழகு தலைமையில் டாக்டர் கார்த்திகேயன் மருத்துவ குழுவினர் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல் பரிசோதனை செய்து மருந்து வழங்கினர். பள்ளி தாளாளர் திருப்பதி செல்வன், முதுநிலை முதல்வர் அருணா தேவி முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் திருமலை ராஜன் தலைமையில் ஆசிரியர்கள் செய்தனர்.