ADDED : செப் 22, 2025 03:22 AM
மாணவிகளுக்கு பயிற்சி
விருதுநகர் : விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் மகளிர் மேம்பாட்டு அமைப்பு சார்பில் மாணவிகளுக்கு தேவையற்ற பொருட்களை கலைப் பொருளாக மாற்றுவது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் லீமா வரவேற்றார். வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் அமுதா பயிற்சி வழங்கினார்.
வேலைவாய்ப்பு திறன் பயிற்சி
சிவகாசி : பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரியில் தமிழ்நாடு அரசின் ஐ.சி.டி., அகாடமி, இன்போசிஸ் நிறுவனம் சார்பில் வேலை வாய்ப்பு திறன் பயிற்சி நடந்தது. கல்லுாரி தாளாளர் சோலைசாமி தலைமை வகித்தார். இயக்குனர்கள் அருண்குமார், விக்னேஷ்வரி முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிசாமி, துறை தலைவர்கள் வளர்மதி, பாலசுப்பிரமணியன், நடராஜன், ரமணி கலந்து கொண்டனர். ஐ.சி.டி., அகாடமி மாநில தலைவர் பூர்ண பிரகாஷ், மேலாளர் சரவணகுமார் பேசினர். மென் திறன் பயிற்சியாளர் சந்தியா, தொழில்நுட்ப பயிற்சியாளர் விமல்ராஜ் பயிற்சி அளித்தனர். ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகம் மின்னணுவியல் துறை பேராசிரியர் ரஞ்சித் குமார், கல்லுாரி ஐ.சி.டி., அகாடமி ஒருங்கிணைப்பாளர் விமலா செய்தனர்.
கருத்தரங்கம்
சிவகாசி: அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி முதுகலை பொருளாதாரத்துறை, வணிக மேலாண்மை துறை சார்பில் நிலையான வளர்ச்சி இலக்குகளை நோக்கி பொருளாதார மற்றும் வணிக முன்னேற்றத்தை அளவிடுதல் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. பொருளாதாரத் துறை தலைவர் காளிராஜன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் அசோக் தலைமை வகித்தார். ஜி.டி.என்., கலைக் கல்லுாரி பொருளாதார துறை தலைவர் ரவிச்சந்திரன், பேராசிரியர் அருண், காந்தி கிராம கிராமிய பல்கலை மேலாண்மை பள்ளி பேராசிரியர் சவுந்தர பாண்டியன் பேசினர். தொடர்ந்து அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி ஜி.டி.என்., கல்லுாரி பொருளாதார துறைகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. வணிக மேலாண்மை துறை தலைவர் மது பிரசாத் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் ராஜேஷ், ராம்குமார், பூபதி ராஜ் செய்தனர்.