ADDED : அக் 05, 2025 03:06 AM
மருந்தியல் கல்லுாரிக்கு விருது
சிவகாசி : சிவகாசி ஆனைக்குட்டம் சங்கரலிங்கம் புவனேஸ்வரி மருந்தியல் கல்லுாரி, தமிழ்நாடு மருந்தியல் கல்லுாரிகளுக்கு இடையில் இரண்டாவது சிறந்த கல்வி நிலையமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த விருதினை டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் வழங்கியது. கல்வி தரம், ஆராய்ச்சி முன்னேற்றம், உட் கட்டமைப்பு மாணவர்களின் சாதனைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை மதிப்பீடு செய்து இந்த விருந்து வழங்கப்பட்டது.
----- தேசிய தொழில்நுட்ப வல்லுநர்கள் தினம்
சிவகாசி : சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி கணினி அறிவியல் துறை சார்பில் தேசிய தொழில்நுட்ப வல்லுநர்கள் தினத்தை முன்னிட்டு துறைகளுக்கு இடையேயான போட்டிகள் நடந்தது. மாணவிகள் பாண்டீஸ்வரி, மிருதுளா தொகுத்து வழங்கினர். மாணவி குரு லட்சுமி வரவேற்றார்.மாணவிகள் வைஷ்ணவி, திலோத்தமா பிரார்த்தனை பாடல் பாடினார். மீம் கிரியேஷன், டிஜிட்டல் போஸ்டர் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவி விஜய பிரியா நன்றி கூறினார்.-