ADDED : செப் 27, 2026 11:44 PM

திருச்சுழி: திருச்சுழி அருகே அரசு நடுநிலைப்பள்ளி சுற்று சுவர்விழும் நிலையில் இருப்பதால் மாணவர்களை அனுப்ப பெற்றோர்கள் தயக்கம் காட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த ராஜகோபாலபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது போத்தம்பட்டி. இங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 6 முதல் 8 வகுப்புகள் உள்ளது. இதில், சுத்தமடம், போத்தம்பட்டி, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் படிக்கின்றனர்.
பள்ளியின் காம்பவுண்ட் சுவர் கட்டப்பட்டு 20 ஆண்டுகள் ஆன நிலையில் சேதம் அடைந்தும், சாய்ந்தும் விழும் நிலையில் உள்ளது. பள்ளியில் மாணவர்கள் விளையாடும் நேரங்களில் சுற்று சுவர் அருகில் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மாவட்ட நிர்வாகம் மாணவர்கள் நலன் கருதி பள்ளியில் சுற்று சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
