/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இடியும் நிலையில் பள்ளி காம்பவுண்டு சுவர்
/
இடியும் நிலையில் பள்ளி காம்பவுண்டு சுவர்
ADDED : செப் 20, 2025 11:20 PM
திருச்சுழி:திருச்சுழி அருகே அரசு நடுநிலை பள்ளியின் காம்பவுண்ட் சுவர் இடியும் நிலையில் உள்ளதால் மாணவர்கள் பயத்துடன் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.
திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த ராஜகோபாலபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது போத்தம்பட்டி.
இங்கு அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு படிக்க வருகின்றனர். பள்ளியின் சுற்று சுவர் கட்டி பல ஆண்டுகள் ஆன நிலையில், பல இடங்களில் சேதமடைந்தும், பெயர்ந்தும் விழும் நிலையில் உள்ளது. மாணவர்கள் பயத்துடன் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.
ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் பள்ளிக்கு புதிய சுற்று சுவர் கட்டி தருவதில் மெத்தனம் காட்டுகிறது. மாணவர்கள் நலன் கருதி பள்ளிக்கு புதிய சுற்றுச்சுவர் கட்டித் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.