/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பள்ளி மேலாண்மை குழுக்கள் செயல்பாடு மூலம் இடைநின்ற மாணவர்களை சேர்க்க எதிர்பார்ப்பு
/
பள்ளி மேலாண்மை குழுக்கள் செயல்பாடு மூலம் இடைநின்ற மாணவர்களை சேர்க்க எதிர்பார்ப்பு
பள்ளி மேலாண்மை குழுக்கள் செயல்பாடு மூலம் இடைநின்ற மாணவர்களை சேர்க்க எதிர்பார்ப்பு
பள்ளி மேலாண்மை குழுக்கள் செயல்பாடு மூலம் இடைநின்ற மாணவர்களை சேர்க்க எதிர்பார்ப்பு
ADDED : நவ 01, 2024 04:37 AM
விருதுநகர்: மாவட்டத்தில் பள்ளி மேலாண்மை குழுக்களை முழுவீச்சில் செயல்படுத்தி இடைநின்ற மாணவர்களை சேர்க்க எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மேலாண்மை குழுக்கள் செயல்படுகின்றன. பெற்றோர், தலைமையாசிரியரை கொண்டு செயல்படும் இக்குழுக்கள் பலவீனமாக காணப்படுகிறது. பள்ளி மேலாண்மை குழுக்களை மறு கட்டமைப்புக்காக பள்ளிக்கல்வித்துறை ஆகஸ்ட் மாதம் தேர்தல் நடத்தியது. அதன் படி ஒரு பள்ளிக்கு 24 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த உறுப்பினர்களில் பெண்களுக்கு 50 சதவீதமும், பெற்றோருக்கு 75 சதவீதமும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.இடை நின்ற மாணவர்களை சேர்க்க பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் தற்போது தேர்வு செய்யப்பட்ட பள்ளி மேலாண்மை குழுக்களும் முழுவீச்சில் செயல்பாட்டில் இல்லை. காரணம் 24 உறுப்பினர்களை நியமிக்கும் அளவுக்கு கூட பல பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை இல்லை. இந்நிலையில் இடைநின்ற மாணவர்களை சேர்க்க அந்த ஊரிலே உள்ள பள்ளி மேலாண்மை குழுக்களை பயன்படுத்தி சேர்க்க வேண்டும் என கல்வி ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அனைவரும் அதே ஊரில் இருப்பதால் இடைநின்ற மாணவர்கள் பற்றி எளிதாக தெரியும். இவ்வாறு செய்தாலே இடைநின்ற மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்படுவது அதிகரிக்கும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.