
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் சென்னை மாநில அறிவியல், தொழில்நுட்ப கவுன்சில், இந்திய அரசின் என்.சி.எஸ்.டி.சி., நிதியுதவியுடன் ஜூலை 16 முதல் 18 வரை மூன்று நாட்கள் அறிவியல் கண்காட்சி நடந்தது.
கல்லுாரி செயலாளர் மதன் துவங்கி வைத்தார். இதில் அறிவியல், தொழில்நுட்பத்தில் அடிப்படை, மேம்பட்ட கருத்துக்களை நேரடியாக வெளிப்படுத்தும் விளக்கப் படங்கள், மாதிரிகள், எளிய பரிசோதனைகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டன.
அரசு, உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

