ADDED : மார் 04, 2024 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி:சிவகாசி அருகே அனுப்பன்குளத்தில் விதி மீறி இயங்கிய பட்டாசு ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். சிவகாசி மீனம்பட்டி ஜான்சி ராணி காலனியைச் சேர்ந்தவர் ஞானம் 54. இவருக்கு அனுப்பன்குளத்தில் பாபு பட்டாசு ஆலை உள்ளது.
இங்கு சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலை ஆய்வு தனி தாசில்தார் திருப்பதி, வி.ஏ.ஓ., காளியப்பன் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் பட்டாசு ஆலையில் மரத்தடியில் வைத்து அதிக இருப்பு வைத்து பட்டாசு தயாரித்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

