/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அர்ஜுனா ஆற்றை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்கள்
/
அர்ஜுனா ஆற்றை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்கள்
அர்ஜுனா ஆற்றை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்கள்
அர்ஜுனா ஆற்றை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்கள்
ADDED : டிச 08, 2024 05:24 AM

சிவகாசி : சிவகாசி அருகே எம் புதுப்பட்டி வழியாகச் செல்லும் அர்ஜுனா ஆற்றில் சீமைக் கருவேல மரங்கள், கோரைப் புற்கள் ஆக்கிரமித்துள்ளதால் மழை பெய்தும் பயனில்லை என விவசாயிகள் புலம்புகின்றனர். எனவே சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசி அருகே காளையார் குறிச்சி, எம்.புதுப்பட்டி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக அர்ஜுனா ஆறு செல்கிறது. இதனை நம்பி இப்பகுதியில் 3000 ஏக்கரில் சோளம், நெல், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றது.
மேலும் கிணற்று பாசனத்திலும் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றது. இப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.
இந்நிலையில் ஆறு முழுவதுமே சீமைக் கருவேல மரங்கள், கோரைப் புற்கள் அதிக அளவில் ஆக்கிரமித்துள்ளது.
தவிர ஒரு சில இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகளும் கொட்டப்பட்டுள்ளதால் மழை பெய்தாலும் தண்ணீர் செல்வதற்கு வழி இல்லை.
இதனால் அர்ஜுனா ஆறு செல்லும் ஆனைக்குட்டம் அணைக்கும் தண்ணீர் வரவில்லை.
இந்த அணைதான் விருதுநகர், திருத்தங்கல் நகருக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
தண்ணீர் வராததால் விவசாயம் பாதிக்கப்பட்டதோடு குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே அர்ஜுனா ஆற்றில் ஆக்கிரமித்துள்ள சீமைக் கருவேல மரங்கள், கோரைப் புற்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.