/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ராஜபாளையம் அருப்புக்கோட்டையில் பருத்தி கொள்முதல் செய்ய இடம் தேர்வு
/
ராஜபாளையம் அருப்புக்கோட்டையில் பருத்தி கொள்முதல் செய்ய இடம் தேர்வு
ராஜபாளையம் அருப்புக்கோட்டையில் பருத்தி கொள்முதல் செய்ய இடம் தேர்வு
ராஜபாளையம் அருப்புக்கோட்டையில் பருத்தி கொள்முதல் செய்ய இடம் தேர்வு
ADDED : ஜன 02, 2026 05:51 AM
விருதுநகர்: ராஜபாளையம், அருப்புக்கோட்டையில் பருத்தி கொள்முதல் செய்ய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக விருதுநகர் விற்பனைக் குழுச் செயலாளர் வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக் குறிப்பு:
இந்திய பருத்திக் கழகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்வதற்கு கபாஸ் கிசான் எனும் செயலி பருத்திக் கொள்முதல் செய்ய அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த செயலியில் முன்னதாகவே சுய பதிவு செய்துக் கொள்வது அவசியம். பதிவு செய்த விவசாயிகள் செயலி மூலம் சிலாட் முன் பதிவு செய்து தங்களுக்கு உகந்த தேதியில் விற்பனைக்கு வரலாம்.
பருத்தி விவசாயிகள் தங்களது பருத்தி உற்பத்தியை குறைந்தபட்ச ஆதார விலையின் கீழ் விற்க தரமான பருத்தியை கொண்டு வர வேண்டும். ஈரப்பதம் அதிகபட்சம் 8 சதவீதம் வரை இருந்தால் முழு விலையும் வழங்கப் படும். அதற்கு மேல் 12 சதவீதம் வரையிலான ஈரப்பதத்திற்கு விகிதாச்சார படி விலை கழிவு செய்யப் படும். 12 சதவீதம் மேல் கொள்முதல் செய்ய இயலாது.
எனவே விவசாயிகள் தங்கள் பருத்தியை தரமானதாகவும், நன்றாக காய வைத்து விற்பனைக்கு கொண்டு வந்தால் ஈரப்பதத்தின் கழிவு இன்றி முழு விலை பெற முடியும்.
மேலும் மாவட்டத்தில் இந்திய பருத்திக் கழகம் மூலம் பருத்தி கொள் முதல் செய்ய ராஜபாளையம், அருப்புக்கோட்டை பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன, என்றார்.

