தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/இடிந்து விழும் நிலையில் சுய உதவி குழு கட்டடம் இடித்து அகற்ற எதிர்பார்ப்பு

இடிந்து விழும் நிலையில் சுய உதவி குழு கட்டடம் இடித்து அகற்ற எதிர்பார்ப்பு

இடிந்து விழும் நிலையில் சுய உதவி குழு கட்டடம் இடித்து அகற்ற எதிர்பார்ப்பு


UPDATED : அக் 28, 2026 04:59 PM

ADDED : அக் 28, 2026 04:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2026 04:59 PM ADDED : அக் 28, 2026 04:55 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் கங்கர் செவலில் சேதம் அடைந்துள்ள மகளிர் சுய உதவி குழு கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கங்கர் செவலில் 30 ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் சுய உதவி குழு கட்டடம் கட்டப்பட்டது. சில ஆண்டுகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த நிலையில் அதன் பின்னர் செயல்படவில்லை. நாளடைவில் கட்டடம் முற்றிலும் சேதம் அடைந்து விட்டது. இந்தக் கட்டடம் பஸ் ஸ்டாப்பில் ரோட்டோரத்தில் உள்ளது. இதனை கடந்து தான் அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. மேலும் மக்கள் பஸ்சிற்காக இடிந்த கட்டடத்தின் அருகில் தான் காத்திருக்கின்றனர். அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சேதமடைந்த கட்டடம் அருகே நடமாடுகின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால் எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிட வாய்ப்பு உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு இந்தக் கட்டடத்தை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us