நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம் : ராஜபாளையம் தெற்கு மலையடிப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சுந்தர், முனியசாமி 30, சிவகாசி பள்ளபட்டி மீனாட்சி காலனியை சேர்ந்த ஸ்டீபன் 26, திருத்தங்கல் ஆலாவூரணியை சேர்ந்த மருதுபாண்டி 31 ஆகியோர் திருத்தங்கல் கல்குவாரி பகுதியில் டூவீலரில் வைத்து கஞ்சா விற்பனை செய்தனர்.
திருத்தங்கல் போலீசார் அவர்களிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா டூவீலரில் பறிமுதல் செய்து, முனியசாமி ஸ்டீபன் மருதுபாண்டியை கைது செய்தனர். சுந்தரை தேடி வருகின்றனர்.