/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை:4 பேர் கைது
/
கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை:4 பேர் கைது
ADDED : ஆக 27, 2025 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்; கிருஷ்ணன் கோவில் இன்ஸ்பெக்டர் தேவமாதா தலைமையில் போலீசார் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு குன்னூர் ரோட்டில் நடத்திய வாகன சோதனையில் 2 டூவீலரில் வந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் திருத்தங்கலை சேர்ந்த சுரேஷ் லிங்கம் 25, சிவகாசி மாரியப்பன் 23, அர்ச்சுனை ராஜன் 21, ஹரிஹரன் 20 என்பதும், இவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய கொண்டு செல்வதும் தெரியவந்தது.
அவர்களிடமிருந்த 3 வாள்களும், 550 கிராம் கஞ்சா பொட்டலங்களும், ஒரு எடை மெஷினையும் பறிமுதல் செய்து 4 பேரையும் கைது செய்தனர்.