ADDED : பிப் 15, 2025 07:19 AM

சிவகாசி : சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரியின் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு, மாவட்ட நிர்வாகம், சமூக நலன் மகளிர் உரிமை துறை சார்பில் மகளிருக்கான கருத்தரங்கம் நடந்தது.
பி.எஸ்.ஆர்., கல்வி குழுமம் தாளாளர் சோலைசாமி தலைமை வகித்தார். கல்லுாரி இயக்குனர் விக்னேஸ்வரி முன்னிலை வகித்தார். முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிசாமி வாழ்த்தினர்.
கலெக்டர் ஜெயசீலன், சிவகாசி கிளை கனரா வங்கி முதன்மை மேலாளர் மகேஷ் வீரப்ப குணாரி மதுரை கிளை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜா, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி ஞானபிரபா பேசினர்.
பாதுகாப்பான சமூக வலைதள பயன்பாடு, சைபர் குற்றங்களை தடுத்தல், நிதி மேலாண்மை, போட்டி தேர்வு, உயர்கல்வி வழிகாட்டி தொடர்பான தகவல்களை அந்தந்த துறை சார்ந்த வல்லுநர்கள் மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.
1500க்கும் மேற்பட்ட மாணவிகள், பேராசிரியர்கள் பாலசுப்பிரமணியன், ஸ்ரீதர், சுரேஷ், மகேஸ்வரி கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் வளர்மதி, ராமதிலகம், ராஜேஸ்வரி, கீதா, கர்மேல் சோபியா செய்தனர்.