நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் வட்டக்குழுவின் சார்பில் சார்பு நீதிபதி பாலமுருகன் வழிகாட்டுதல் படி ஆமத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர், மாணவர்கள் இடையே போதை பொருள் தடுப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம், கருத்தரங்கம் நடந்தது.
தலைமை ஆசிரியர் காளிராஜ், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூக பணியாளர் ஜானகி, மேலாண்மை குழு உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள் முத்துப்பாண்டி தமிழரசன், அருண் செண்பகமணி, எஸ்.ஐ., அஜிஸ் பங்கேற்று போதை பொருள் பயன்படுத்துவதால் உடல் நலம் கெடுவதுடன், சமூக சீர்கேடுகளும் அரங்கேறுகிறது என்றுக் கூறினர்.