/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அறிவுசார் மையங்களில் கருத்தரங்குகள், கூட்டங்கள்
/
அறிவுசார் மையங்களில் கருத்தரங்குகள், கூட்டங்கள்
ADDED : ஜன 13, 2025 04:03 AM
விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் கூறியதாவது:மாவட்டத்தில் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார், அருப்புக்கோட்டை, விருதுநகர் ஆகிய நகரங்களில் அறிவுசார் மையங்கள் அமைந்துள்ளன.
இவற்றில் குறைந்த கட்டணத்தில் தன்னார்வலர்கள், அறக்கட்டளைகள் வாயிலாக நடத்தப்படும் போட்டி தேர்வு கருத்தரங்குகள், இலக்கியக் கூட்டங்கள், கல்வி அறிவுசார்ந்த போட்டிகள், சிறு விழாக்கள் மாலை நேரங்களில் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்.
மேலும் முன் பதிவு, இதர விபரங்கள் குறித்து தெரிந்து கொள்ள சிவகாசி மாநகராட்சி கமிஷனர் 73973 89921, ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சி கமிஷனர் 73973 89916, அருப்புக்கோட்டை கமிஷனர் 73973-89919, விருதுநகர் 73973-89922 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.