/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
டாக்டர் வீட்டில் பணம், நகை திருடிய வேலைக்காரர் கைது
/
டாக்டர் வீட்டில் பணம், நகை திருடிய வேலைக்காரர் கைது
டாக்டர் வீட்டில் பணம், நகை திருடிய வேலைக்காரர் கைது
டாக்டர் வீட்டில் பணம், நகை திருடிய வேலைக்காரர் கைது
ADDED : பிப் 01, 2024 05:18 AM

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் சித்தா டாக்டர் மணியின் வீட்டில் பணமிருந்த மரப்பெட்டியை தூக்கிச் சென்று உடைத்து அதிலிருந்த ரூ. 5 லட்சத்து 71 ஆயிரம், 2 பவுன் தங்க செயின், அலைபேசி ஆகியவற்றை திருடிய முன்னாள் வேலைக்காரர் முருகேசனை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் கீழரத வீதியை சேர்ந்தவர் சித்தா டாக்டர் மணி, 58, நேற்று முன்தினம் இரவு தனது மருத்துவமனையில் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் முன்பு வேலை பார்த்த வத்திராயிருப்பை சேர்ந்த முருகேசன் 60, இரவு 9:30 மணியளவில் டாக்டர் வீட்டில் இருந்த பணப்பெட்டியை தூக்கிச் சென்று தேருக்கு பின்புறம் வைத்து பெட்டியை உடைத்து பணத்தை திருடி உள்ளார். குற்ற பிரிவு போலீசார் வேலைக்காரர் முருகேசனை பிடித்து பணப்பெட்டியை பறிமுதல் செய்தனர்.
பணப்பெட்டியில் இருந்த பணத்தை எண்ணிய போது அதில் ரூ.5 லட்சத்து 71 ஆயிரம் ரொக்கம் பணம், 2 பவுன் தங்கச் செயின், ஒரு அலைபேசி இருந்துள்ளது. இதனையடுத்து வேலைக்காரர் முருகேசனை போலீசார் கைது செய்தனர்.