/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மின்தடை, ஜெனரேட்டர் பழுதால் ஸ்டேட் வங்கியில் சேவை தடை
/
மின்தடை, ஜெனரேட்டர் பழுதால் ஸ்டேட் வங்கியில் சேவை தடை
மின்தடை, ஜெனரேட்டர் பழுதால் ஸ்டேட் வங்கியில் சேவை தடை
மின்தடை, ஜெனரேட்டர் பழுதால் ஸ்டேட் வங்கியில் சேவை தடை
ADDED : செப் 22, 2024 03:47 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் மின் தடை, ஜெனரேட்டர் பழுதால் வங்கி சேவை மதியம் வரை தடைபட்டதால் வாடிக்கையாளர்கள் அதிருப்திஅடைந்தனர்.
அருப்புக்கோட்டை ஸ்டேட் பாங்க்ஆப் இந்தியா பிரதான கிளையில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், தனியார் நிறுவனங்கள், வியாபாரிகள் என ஆயிரக்கணக்கானோர் பல்வேறு வகையான கணக்குகளை துவங்கி வங்கி சேவைகளை பெற்று வருகின்றனர்.
நேற்று மின்வாரியம் காலை 9:00 மணி முதல் மதியம் 2 :00மணி வரை மின் தடை என அறிவிப்பு செய்துள்ளது. வங்கியும் காலை வழக்கம்போல் செயல்பட்டது. அரை மணி நேரத்தில் ஜெனரேட்டர் பழுதால் பணிகள் பாதிக்கப்பட்டன.
மாற்று ஏற்பாடுகள் செய்ய முடியாத நிலையில், வங்கி நிர்வாகம் இன்று மின் தடையின் காரணமாக வங்கி சேவை தடைபட்டு உள்ளது வாடிக்கையாளர்கள் பந்தல்குடி ரோட்டில் உள்ள டவுன் கிளையை அணுகவும் என அறிவிப்பு வைத்து விட்டனர். இதனால் வாடிக்கையாளர்கள், வயதானவர்கள் பெரும் பாதிப்பு அடைந்தனர்.
ஜெனரேட்டர் பழுது
ஜெயசுதாகர், வங்கி மேலாளர்: மின் தடை காரணமாக ஜெனரேட்டரை பயன்படுத்தினோம். அது பழுதடைந்து விட்டது. யுபிஎஸ் ., சும் கை கொடுக்கவில்லை.
வங்கியின் மின் தேவைக்கு 100 கே.வி., ஜெனரேட்டர் இருந்தால் தான் செயல்படும். உள்ளூரில் கிடைக்காததால் மாற்று வழி செய்ய முடியாமல் பணிகள் பாதிக்கப்பட்டது. மதியம் 2 மணிக்கு மேல் மின்சாரம் வந்த உடன் பணிகள் நடந்தது.