நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான மம்சாபுரம் ரோட்டில் சாலியன் தோப்பு பகுதியில் உள்ளது. இங்கு குத்தகைக்கு எடுத்து பனைமரத் தொழிலாளர்கள் பனை ஏறி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தோப்பு பகுதியில் ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சி கழிவு குப்பையை கொட்டியுள்ளனர்.
இதுகுறித்து தோப்பு குத்தகைதாரர் பாண்டி மம்சாபுரம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு பண்ணையில் இருந்த குடிசை தீப்பிடித்து எரிந்தது.
குப்பையை கொட்டுவதை தடுத்ததால் அதில் சம்பந்தப்பட்டவர்கள் தீ வைத்திருக்கலாம் என பாண்டி மம்சாபுரம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரிக்கின்றனர்.

