/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பெரிய கண்மாயில் கலக்கும் கழிவுநீர்
/
பெரிய கண்மாயில் கலக்கும் கழிவுநீர்
ADDED : மே 10, 2025 06:56 AM
சாத்துார்: சாத்துார் அருகே தாயில்பட்டி பெரிய கண்மாயில் கழிவு நீர் கலப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்.
சாத்துார் மடத்துப் பட்டி ரோட்டில் தாயில்பட்டி பெரிய கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் ஊராட்சியின் கிழக்கு பகுதியில் உள்ள நகர பகுதியில் இருந்து ஏராளமான கழிவு நீர் கண்மாயில் கலந்து வருகிறது.
மேலும் கலைஞர் காலனி கோட்டையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் கழிவு நீர் கண்மாய் நீர் வரத்து ஓடையில் கலந்து வருகிறது.
பெரிய மழை பெய்யும் போது கண்மாய்க்குள்கழிவு நீரையும் குப்பைகளையும் மழை நீர் அடித்துக் கொண்டு வந்து சேர்த்து விடுகிறது.
மேலும் கண்மாய் நீர்வரத்து ஓடைகளில் பட்டாசு ஆலை கழிவுகளும் அதிகளவில் கொட்டப்படுகிறது.
இதன் காரணமாக கண்மாயில் தேங்கியுள்ள தண்ணீர் மாசு அடைந்து காணப்படுகிறது.
100 ஏக்கருக்கு மேல் பாசன வசதி தந்த இந்த கண்மாய் தண்ணீரை தற்போது விவசாயத்திற்கு கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தாயில்பட்டி ஊராட்சியின் நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ள இந்த கண்மாயில் சுத்தமான மழை நீர் தேங்குவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.