/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மீனம்பட்டி தெருவில் ஆறாக ஓடும் கழிவுநீர்
/
மீனம்பட்டி தெருவில் ஆறாக ஓடும் கழிவுநீர்
ADDED : பிப் 12, 2025 06:21 AM

சிவகாசி : சிவகாசி அருகே அனுப்பன்குளம் ஊராட்சி மீனம்பட்டி சந்தன மாரியம்மன் நகரில் வாறுகால் சேதம் அடைந்து கழிவுநீர் தெருவில் ஆறாக ஓடுவதால் குடியிருப்பு வாசிகள் தொற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
அனுப்பன்குளம் ஊராட்சி மீனம்பட்டி சந்தன மாரியம்மன் நகரில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
பகுதியில் உள்ள தெருக்களில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வாறுகால் அமைக்கப்பட்டது.
ஒரு சில தெருக்களில் வாறுகால் இல்லை. இவற்றில் பெரும்பான்மையான வாறுகால் சேதம் அடைந்து விட்டது.
இதனால் கழிவுநீர் முழுவதும் தெருவில் ஆறாக ஓடுகிறது. கழிவு நீரை மிதித்துதான் வீட்டிற்குள் செல்ல வேண்டி உள்ளது. டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும்போது கழிவு நீர் வீடுகளுக்குள் தெறிக்கின்றது. இதனால் அப்பகுதி முழுவதுமே துர்நாற்றம் ஏற்படுகின்றது. எனவே இப்பகுதியில் வாறுகாலை சீரமைத்து கழிவுநீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.