/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோட்டில் வெளியேறும் கழிவுநீர் ---வாகன ஓட்டிகளுக்கு சிக்கல்
/
ரோட்டில் வெளியேறும் கழிவுநீர் ---வாகன ஓட்டிகளுக்கு சிக்கல்
ரோட்டில் வெளியேறும் கழிவுநீர் ---வாகன ஓட்டிகளுக்கு சிக்கல்
ரோட்டில் வெளியேறும் கழிவுநீர் ---வாகன ஓட்டிகளுக்கு சிக்கல்
ADDED : ஆக 23, 2025 11:17 PM

ராஜபாளையம்:ராஜபாளையம் நகர் பகுதி நடுவே திருமங்கலம்- - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை சாந்தி தியேட்டர் பஸ் ஸ்டாப் எதிரே மலையடிப்பட்டியில் தொடங்கி அம்பல புளி பஜார் வரை வரும் வாறுகால் கழிவு நீர் ரைஸ் மில் ரோடு வழியாக செல்ல வேண்டும்.
இந்நிலையில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் மெயின் ரோட்டில் தேங்கி வழிகிறது. இதனால் துர்நாற்றத்துடன் வணிக கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் சுகாதார கேட்டிற்கு ஆளாகி வருகின்றனர். அடிக்கடி பகுதியில் ஏற்பட்டு வரும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இதுகுறித்து ஜெயக்கனி: சஞ்சீவி மலை நீர் வரத்து கால்வாயில் வெளியேறும் கழிவு நீர் சாந்தி தியேட்டர் முன்பு குறுகிய பாலத்தால் அடைப்பு ஏற்பட்டு ரோட்டில் வழிந்து வெளியேறுகிறது. சுற்றிலும் உணவகங்கள் ,வணிக நிறுவனங்கள் உள்ள இப்பகுதியில் மாதம் ஒரு முறை இப்பிரச்னை ஏற்பட்டு குறைந்தது மூன்று நாட் களுக்கு நீடிக்கிறது.
இதனால் சாலையில் செல்வோர் மீது கழிவு நீர் தெறிப்பதும் ஒதுங்கி செல்ல வழி இன்றியும் அவதிக்கு உள்ளாகின்றனர். நெடுஞ்சாலையில் உள்ள வடிகால்களை துார்வார வேண்டும்.

