/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பூங்காவில் கழிவுநீர், மதுபாட்டில்கள்; போட்டித்தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் அவதி
/
பூங்காவில் கழிவுநீர், மதுபாட்டில்கள்; போட்டித்தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் அவதி
பூங்காவில் கழிவுநீர், மதுபாட்டில்கள்; போட்டித்தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் அவதி
பூங்காவில் கழிவுநீர், மதுபாட்டில்கள்; போட்டித்தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் அவதி
ADDED : நவ 30, 2024 05:50 AM

விருதுநகர்; விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நுாலக அலுவலகம் முன்பு போட்டித் தேர்வு பயில்வோர் பூங்கா அருகே கழிவுநீர் தேக்கம், குப்பை, மதுபாட்டில்கள் குவிந்து கிடப்பதால் மாணவர்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
நுாலக அலுவலகம் முன்பு போட்டித்தேர்வு பயில்வோர் பூங்கா 2023 முதல் செயல்படுகிறது. இங்கு அருகில் உள்ள செவல்பட்டி, கூரைக்குண்டு, பட்டம்புதுார், விருதுநகரின் நகர்ப்புறங்கள் என சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பெண்கள், மாணவர்கள் படிக்க வருகின்றனர். இவர்கள் குடிநீர், கழிப்பிடத்திற்காக கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வர வேண்டும். அவ்வாறு வர இரு வழிகள் உள்ளன.
இதில் ஆண்கள் சிறுநீர் கழிப்பிடத்தை யொட்டி உள்ள மற்றொரு வழியின் அருகே கழிவுநீர் தேங்கி உள்ளது. தற்போது மழை வேறு பெய்வதால் வாரக்கணக்கில் தேங்கி நோய் பரவும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. மாணவர்கள் மூக்கை பிடித்த படி செல்லும் அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. அதன் அருகிலேயே குப்பை குவிந்து கிடக்கிறது. இதில் மதுபாட்டில்களும் அடங்கும். பெண்கள், மாணவிகள் வேறு வழியை பயன்படுத்தி சென்று வருகின்றனர்.
இந்த கழிவுநீர் தேக்கம் அருகில் உள்ள சிறுநீர் கழிப்பிடத்தில் இருந்து வெளியாவது போன்று உள்ளது. இதை வெறுமனே அகற்றுவதோடு விட்டுவிடாமல், எங்கிருந்து கசிகிறது என்பதை கண்டறிந்து சரி செய்ய வேண்டும். இந்த பிரச்னை மழைக்காலம் துவங்கியது முதலே உள்ளது.
அதே போல் குப்பையை கூரைக்குண்டு ஊராட்சி நிர்வாகம் அடிக்கடி அகற்றி வரும் நிலையில், தற்போது குவிந்து வருகிறது.
மதுபாட்டில்கள் வெளிநபர்கள் தான் கொண்டு வந்து இங்கு போட்டுள்ளனர். எனவே இது போன்ற சூழல் ஏற்படாமல் தடுக்க வேண்டும். போட்டித்தேர்வு பயிலும் மாணவர்கள் முகம் சுழிக்காமல் படிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

