/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஊருணியில் கலக்குது கழிவுநீர் பாதுகாப்பான குடிநீருக்கு சிக்கல்
/
ஊருணியில் கலக்குது கழிவுநீர் பாதுகாப்பான குடிநீருக்கு சிக்கல்
ஊருணியில் கலக்குது கழிவுநீர் பாதுகாப்பான குடிநீருக்கு சிக்கல்
ஊருணியில் கலக்குது கழிவுநீர் பாதுகாப்பான குடிநீருக்கு சிக்கல்
ADDED : செப் 30, 2025 03:42 AM

திருச்சுழி: திருச்சுழி அருகே வடக்குநத்தம் ஊருணியில் கழிவுநீர் கலப்பதால் போர்வெல் மூலம் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பாக உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது வடக்கு நத்தம் ஊராட்சி . ஊருக்கு நடுவில் இருக்கும் ஊருணியில் 3 போர்வெல் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
ஊருணி பராமரிப்பு இன்றி இருப்பதால் தெருக்களில் உள்ள வாறுகாலின் கழிவுநீர் இதில் விடப்படுகிறது. தண்ணீருடன் கழிவுநீர் கலந்து கடும் துர்நாற்றம் ஏற்படுகிறது. ஊருணி அருகில் வர முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. இதிலிருந்து வழங்கப்படும் குடிநீரை மக்கள் பயன்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். குடிநீரில் கழிவுநீர் கலந்து வரக்கூடிய வாய்ப்பு உள்ளதால் மக்கள் பயன்படுத்துவது இல்லை. தனியார் இடத்தில் விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். ஊராட்சி நிர்வாகம் ஊருணியை பராமரிப்பு செய்து கழிவுநீர் கலக்காத வகையில் நடவடிக்கை எடுத்து மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.