/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புத்துாரில் தண்ணீருடன் கலந்து வரும் கழிவு நீர்
/
புத்துாரில் தண்ணீருடன் கலந்து வரும் கழிவு நீர்
ADDED : மார் 08, 2024 12:31 PM

தளவாய்புரம்: ராஜபாளையம் அருகே புத்துார் தரை தள தொட்டியில் இருந்து தண்ணீருடன் சாக்கடை கலந்து வருவதால் தண்ணீரை பயன்படுத்த முடியாமல் திண்டாடி வருகின்றனர்.
தளவாய்புரம் அருகே புத்துார் ஊராட்சி பகுதியில் சில வருடங்களுக்கு முன் ஆழ்துளை கிணறு அமைத்து தரைதள தொட்டி வைக்கப்பட்டது. இப்பகுதி தெற்கு தெரு குடியிருப்பினர் அன்றாட புழக்கத்திற்கும் வறட்சி காலங்களில் குடிநீராகவும் பயன்படுத்தி வந்தனர்.
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் பேவர் பிளாக் சாலை பணிக்காக ரோடு சமன்படுத்தப்பட்டு ஆழ்துளை கிணறு அருகே பள்ளம் தோண்டிய போது கிணற்றின் குழாய் சேதமடைந்தது.
இதனால் அருகே செல்லக்கூடிய சாக்கடை கழிவுநீர் கடந்த ஏழு மாதங்களாக கிணற்று நீரில் கலந்து வருகிறது.
இத்துடன் கழிவு நீர் கலந்து வரும் தண்ணீர் அதிக நுரையுடன் பொங்கி வருவதுடன் தண்ணீரில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கோடைகாலம் தொடங்கியதால் பற்றாக்குறை சமாளிக்க குடம் ஒன்றுக்கு குடிநீர் ரூ. 10 முதல் 15 வரை விலை கொடுத்து வாங்க வேண்டி உள்ளது.
ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மக்களுக்கு நோய் வருவதை தடுக்க குடிநீரில் கலந்து வரும் பகுதியை ஆய்வு செய்து மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

