/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துார் அங்கன்வாடி மையம் முன் கழிவுநீரால் சுகாதாரக்கேடு
/
சாத்துார் அங்கன்வாடி மையம் முன் கழிவுநீரால் சுகாதாரக்கேடு
சாத்துார் அங்கன்வாடி மையம் முன் கழிவுநீரால் சுகாதாரக்கேடு
சாத்துார் அங்கன்வாடி மையம் முன் கழிவுநீரால் சுகாதாரக்கேடு
ADDED : அக் 03, 2024 04:16 AM

சாத்துார்: சாத்துார் அருகே கீழ ஒட்டம் பட்டி அங்கன்வாடி மையம் முன்பு கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.
சாத்துார் ஒன்றியம் சிந்தப் பள்ளி ஊராட்சிக்குட்பட்ட கீழ ஒட்டம்பட்டி கிராமத்தில் ஊராட்சி துவக்கப்பள்ளி, அங்கன்வாடி செயல்பட்டு வருகின்றன.
ஊராட்சி துவக்கப்பள்ளி, அங்கன்வாடி பகுதியில் வாறுகால் வசதி இல்லாத நிலை உள்ளது. குடியிருப்பு பகுதியில் இருந்து வரும் கழிவு நீரும் அங்கன்வாடி சமையல் அறையில் இருந்து வெளியில் வரும் கழிவு நீரும் பள்ளி முன்பு குளம் போல் தேங்கி நிற்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.
துர்நாற்றம் காரணமாகவும் கொசுக் கடியாலும் பள்ளி குழந்தைகள் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். இதனால் அங்கன்வாடிக்கு குழந்தைகளை கொண்டு வந்து விடும் பெற்றோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
பள்ளி முன்பு கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்திடம் மக்கள் புகார் தெரிவித்தும் இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை. அருகில் கழிவு நீர் தேங்கி நிற்கும் நிலையில் இங்கு மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கான உணவும் இங்கு சமையல் செய்யப்படுகிறது.
காலை உணவு திட்டத்தில் தயார் செய்யப்படும் உணவை பள்ளிகளுக்கு கொண்டு செல்லும்போது கழிவு நீரில் கால் வைத்து துாக்கிச் செல்லும் நிலை உள்ளது.
அங்கன்வாடி முன்பு தேங்கியுள்ள கழிவு நீரை அகற்றவும் மீண்டும் கழிவு நீர் தேங்காத வகையில் வழிவகை செய்ய வேண்டுமென மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

