/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரேஷன் கடை அருகே தேங்கும் கழிவுநீர்
/
ரேஷன் கடை அருகே தேங்கும் கழிவுநீர்
ADDED : டிச 03, 2024 05:19 AM

சாத்துார்: சாத்துார் அமீர் பாளையம் ரேஷன் கடை அருகே கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.
சாத்துார் ஊராட்சி ஒன்றியம் அயன் சத்திரப் பட்டி ஊராட்சிகுட்பட்ட அமீர்பாளையம் 3வது தெருவில் ரேஷன் கடை, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் அருகிலேயே மேல்நிலை குடிநீர் தொட்டியும் உள்ளது.
மேல்நிலை குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரம்பி வழியும்போது அது அங்குள்ள காலி இடத்தில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இந்த தெருவில் உள்ள கழிவுநீர் செல்லும் வாறுகால் துார்ந்து போய் உள்ளது. துார்ந்து போன வாறுகாலில் இருந்தும் இப்பகுதியில் உள்ள குடியிருப்பு வீடுகளில் இருந்து வெளியாகும் கழிவுநீர் இந்த காலி இடத்தில் கலப்பதால் பாசிபடர்ந்து குளம் போல் காணப்படுகிறது.
ரேஷன் கடைக்கு அருகில் கழிவு நீர் தேங்கி நிற்பதால் பொருட்கள் வாங்க வரும் மக்கள் கொசுக்கடிக்கு ஆளாகின்றனர். ஊராட்சி நிர்வாகம் கழிவு நீரை அகற்றி பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.