/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நிழற்குடை முன் கழிவுநீர் தேக்கம்
/
நிழற்குடை முன் கழிவுநீர் தேக்கம்
ADDED : மார் 27, 2025 06:08 AM

காரியாபட்டி: காரியாபட்டி தோணுகால் நிழற்குடை முன் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் முகம் சுளிக்கின்றனர்.
காரியாபட்டி தோணுகாலில் மதுரை தூத்துக்குடி நான்கு வழி சாலையில், மதுரை செல்லும் வழியில் பயணிகள் நிழற்குடை உள்ளது.
காரியாபட்டி, மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல பயணிகள் நிழற்குடையில் காத்திருப்பர். நிழற்குடை அருகே ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
வாறுகால் வசதி இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் நான்கு வழிச்சாலையில் செல்கிறது. கழிவு நீர் அனைத்தும் நிழற்குடை முன் குட்டை போல் தேங்கி நிற்கிறது. வாகனங்கள் சென்று சேறும் சகதியுமாக உள்ளது. துர்நாற்றம் ஏற்பட்டு, கொசு கடிப்பதால் நிழற்குடையில் பயணிகள் யாரும் உட்காருவது கிடையாது. கழிவு நீரால் துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் முகம் சுளிக்கின்றனர். டவுன் பஸ்கள் வேகமாக வந்து நிறுத்தும்போது ஆடையில் சகதிப்பட்டு பாதிப்புக்கு உள்ளாகின்றனர். கழிவுநீர் தேங்குவதை தடுக்க, மாற்று வழி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.