ADDED : ஜன 30, 2025 11:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி; காரியாபட்டியில் கல்குறிச்சி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி சிவனடியார்கள் சார்பாக, ருத்ராட்ச சிவலிங்கம் உருவாக்கப்பட்டு, அருப்புக்கோட்டை காமராஜர் நகரில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
திருவண்ணாமலையிலிருந்து 450 கிலோ ருத்ராட்சம் வாங்கப்பட்டது. 51 ஆயிரம் ருத்ராட்சத்தில்,  11 அடி உயர கொண்ட சிவலிங்கம் உருவாக்க  3 மாதங்களாக திருப்பணிகள்  நடைபெற்றன.
நேற்று மாலை முக்குரோடு மாரியம்மன் கோயிலில் இருந்து ரதம் புறப்பட்டு மாரியம்மன் கோயில் வரை சென்றது. கல்குறிச்சி,  பாளையம்பட்டி வழியாக ரதம் புறப்பட்டது. ஏற்பாடுகளை சிவனடியார்கள் செய்திருந்தனர்.

