/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கடை இடிப்பு: அதிகாரிகள் மீது புகார்
/
கடை இடிப்பு: அதிகாரிகள் மீது புகார்
ADDED : பிப் 01, 2025 02:18 AM
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆண்டாள் கோயில் நிர்வாகம் கையகப்படுத்திய கடையை இடித்த நகராட்சி அதிகாரிகள் மீது கோயில் நிர்வாகத்தின் சார்பில் போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்துார் கீழரத வீதியில் இருந்து அரங்கநாதபெருமாள் கோயிலுக்கு செல்லும் தெரு நுழைவுப்பகுதியில் இருந்த கடையை கடந்த சில நாட்களுக்கு முன் நீதிமன்ற உத்தரவில் இடிப்பதாக கூறி நகராட்சி அதிகாரிகள் கடையின் முன்பகுதியை இடித்தனர்.
இதற்கு கோயில் அலுவலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து கடையை இடிப்பதை நிறுத்தினர்.
இந்நிலையில் கோயில் நிர்வாகம் கையகப்படுத்திய அக்கடையை இடித்த நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோயில் நிர்வாகத்தின் சார்பில் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக செயல் அலுவலர் சக்கரையம்மாள் தெரிவித்தார்.