நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் மல்லாங்கிணர் ரோட்டில் திருமுருகன் என்பவருக்கு சொந்தமான பர்னிச்சர் கடை உள்ளது.
நேற்று காலை வந்து பார்த்த போது பீரோவில் இருந்த ரூ.30 ஆயிரம் ரொக்கம், 3 பவுன் தங்க நகை திருடு போனது தெரிந்தது.
போலீசார் மோப்பநாய் உதவியுடன் தடயங்களை சேகரித்து விசாரணையில் ஈடுபட்டனர்.
இதில் மொட்டை மாடி மேலே உள்ள கதவின் பூட்டை உடைத்து உள்ளே திருட வந்தது தெரிந்தது. கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

